வாகனம் ஓட்டும் போது பிரெஞ்சு மக்கள் மிக அதிகமாக தொலைபேசி பயன்படுத்துவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கிட்டத்தட்ட பத்தில் எட்டு பேர் வாகனம் செலுத்தும் போது தொலைபேசியினை பயன்படுத்துகிறார்கள். தொலைபேசி அழைப்புக்களுக்காகவும், GPS போன்ற தேவைகளுக்காகவும் தொலைபேசியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
மக்கள் வீதி போக்குவரத்து குறித்தும், விபத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இல்லை எனவும், மணிக்கு 130 கி. மீ வேகத்தில் பயணிக்கும் வாகனத்தில் - இரண்டு நொடிகள் வரை வீதியில் இருந்து தொலைபேசிகளை பார்க்கிறனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகப்பெரும் விபத்துக்கு வழி வகுக்கும் என மேற்படி ஆய்வை வெளியிட்ட la Fondation Vinci Autoroutes அறிவித்துள்ளது.