பிரான்ஸின் மோர்பிஹான் பிராந்தியத்தில் தம்பதியினர் தமது இரண்டு குழந்தைகளை கவனிக்க தவறியதால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 2020 நவம்பரில் தொண்டு நிறுவனமொன்றினால் மோசமான நிலையில் மீட்க்கப்பட்ட குறித்த குழந்தைகள் 5 வயது மற்றும் 3 வார வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆவர்.
இதனைத் தொடர்ந்து சிறுமிகளின் இளையவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததைத் தொடர்ந்து குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
வெள்ளிக்கிழமையன்று வான்னஸ் வழக்குரைஞர் அலுவலக தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களில் இருந்து குறித்த தம்பதியினர் தமது குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து அசட்டு தனமாக செயற்பட்டமையினாலும், அடிப்படை தேவையான உணவைக்கூட அவர்கள் சரியான முறையில் வழங்கியிருக்கவில்லை என்பதாலும் வியாழனன்று அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றமை தெரியவருகின்றது.
ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தாய்க்கு 15 மாதங்கள் இடைநீக்கமும் விதிக்கப்பட்டது. மேலும் குற்றவியல் நீதிமன்றம் இரு பெற்றோருக்கும் எதிரான பெற்றோரின் அதிகாரத்தை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது.
மற்றும் Ouest-France இன் படி இயக்கவியல் நிபுணராக பணிபுரியும் தந்தை, “நிரந்தரமாக சிறார்களுடன் பழகும் தொடர்பை உள்ளடக்கிய எந்தவொரு தொழில்முறை நடவடிக்கையிலும்” ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டார்.
தந்தைக்கு, 15 வயதிற்குட்டப்பட்ட குழந்தைகளுக்கு வேண்டுமென்றே அவர்களுக்கான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யாமையினாலும் குழந்தை இறந்து போகுமளவிற்கு அவர்கள் மீது வன்முறையைப் பிரியோகித்தமைக்காகவும் தாய்க்கு, தந்தையின் நடத்தை குறித்து எதிர்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தமைக்காகவும் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.