போதைப்பொருள் விற்பனையாளர்கள மகிழுந்தினால் மோதியதில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள rue Burq வீதியில் காவல்துறையினர் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருவர் மகிழுந்தில் வந்து தமது வாடிக்கையாளர் ஒருவரிடன் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட முற்பட்டபோது, காவல்துறை அதிகாரிகள், குறித்த போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்ய முற்பட்டனர். ஆனால் தப்பிச்செல்ல முயன்ற கடத்தல்கார்கள் காவல்துறையினரை மகிழுந்தினால் மோதி தள்ளியுள்ளனர்.
இச்சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழுந்தில் இரு போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருந்ததாகவும், அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்