இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உள்ளிட்ட பல தலைவர்கள் வாக்களித்துள்ளனர்.
Emmanuel Macron
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Le Touquet (Pas-de-Calais) நகரில் பகல் 1 மணி அளவில் வாக்களித்தார். அவரது மனைவி பிரிஜித் மக்ரோனும் அதிபர் மக்ரோனுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
Elisabeth Borne
அதேவேளை, Vire, Calvados நகரில் வைத்து பிரதமரும், வேட்பாளருமான Elisabeth Borne தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் போட்டியிட்ட அவரது தொகுதியில், முதலாவது சுற்றில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது சுற்றிலும் அவர் அமோக வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Jean-Luc Mélenchon
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் Jean-Luc Mélenchon, அவரது தொகுதியான Marseille நகரில் தனது வாக்கினைச் பதிவு செய்தார்.
Marine Le Pen
மேலும், மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரான மரீன் லு பென், பா-து-கலேயில் உள்ள Hénin-Beaumont நகரில் தனது வாக்கினை நண்பகலுக்கு முன்னதாக பதிவு செய்தார்.
Valérie Pécresse
மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரான Valérie Pécresse , இன்று காலை 11 மணிக்கு தனது வாக்கினை Vélizy-Villacoublay (Yvelines) நகரில் பதிவு செய்திருந்தார்.
Edouard Philippe
எந்த ஒரு தேர்தலிலும் முதல் ஆளாக தனது வாக்கினைப் பதிவு செய்யும் முன்னாள் பிரதமர் Edouard Philippe, இன்றும் தனது வாக்கினை முதல் ஆளாக Le Havre நகரில் வைத்து பதிவு செய்தார்