பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள rue Durantin வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அதிகாலை 4 மணி அளவில் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்ட பின்னர்
அங்கிருந்து சிறு காயங்களுடன் இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

அதேவேளை, குறித்த வீட்டின் அறை ஒன்றுக்குள் இருந்து தீயில் முற்றாக எரிந்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரது சடலமும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. தீவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.