இன்று ஜூன் 19, ஞாயிற்றுக்கிழமை, பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.
காலை 8 மணிக்கு திறக்கப்பட உள்ள வாக்குச் சாவடிகள், மாலை 7 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். சில நகரங்களில் இரவு 8 மணிவரை திறக்கப்பட்டிருக்கும்.
577 தொகுதிகளுக்கான போட்டியாக இடம்பெற உள்ள இந்த தேர்தலில், ஆளும் தரப்பு பெரும்பான்மையான இருக்கைகளை பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இம்முறைத் தேர்தலில் 6,293 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற முதலாம் சுற்று வாக்கெடுப்பில் ஆளும் தரப்பான Ensemble கட்சிகள் மற்றும் எதிர்த்து போட்டியிட்ட Nupes கூட்டணிக்கட்சிகள் சம பலத்துடன் தொகுதிகளை கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் ஆளும் தரப்பு 270 தொடக்கம் 300 வரையான தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.