இன்று திங்கட்கிழமை காலை 13 ஆம் இலக்க மெற்றோ ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காலை 10.50 மணி அளவில் தீயணைப்பு படையினர் la station Saint-Denis Université மெற்றோ நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர். விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், 13 ஆம் இலக்க தொடருந்து ஒன்றுக்குள் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதையும் சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்திருப்பதையும் பார்த்தனர்.
உடனடியாக சடலம் மீட்கப்பட்டது. குறித்த நபரின் மரணத்துக்குரிய காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அதேவேளை, மேற்படி சம்பவத்தினால் La Fourche - Carrefour Pleyel நிலையங்களிடையே போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டது.