நேற்று சனிக்கிழமை சாம்பியன் லீக் (Ligue des Champions) இறுதிப்போட்டி Stade de France மைதானத்தில் இடம்பெற்றது. அதன்போது பலத்த வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின.
மேற்படி சம்பவங்களுக்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin கடுமையான கண்டனங்கள் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று மாலை 53 பேர் கைது செய்யப்படதாகவும் அவர்களில் 23 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற சாம்பியன் லீக் இறுதிப்போட்டியில் Liverpool மற்றும் Real Madrid அணிகள் மோதின. இதில் இதில் 1-0 எனும் கோல் கணக்கில் Real Madrid அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.