இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் அரேபிய இளவரசர் Tamim bin Hamad AL-Thani ஆகியோர் முக்கிய சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.

இருவரும் இணைந்து இரவு நேர உணவை அருந்த உள்ளனர். அதன்போது இருவரும் ‘இரு நாட்டு உறவு மற்றும் பிராந்திய பிரச்சனைகள்’ தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். அத்தோடு மிக முக்கியமான இரஷ்யா-உக்ரைன் யுத்தம் தொடர்பாகவும் கலந்துரையாட உள்ளனர்.

அதேவேளை, இந்த சந்திப்பு எலிசே மாளிகையில் இடம்பெறவில்லை. பரிசில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த சந்திப்பும் இரவு உணவு உபசாரமும் இடம்பெற உள்ளது.

இம்மானுவல் மக்ரோன் விருந்தினர்களுடன் சந்திப்பை மேற்கொள்ளும் பொழுது எலிசே மாளியில் சந்திப்பதை தவிர்த்து வருகிறார். முன்னதாக 2021 ஆம் ஆண்டில் நெதர்லாந்து பிரதமர் Mark Rutte பரிசுக்கு வரும் போதும், இத்தாலி பிரதமர் Mario Draghi பரிசுக்கு வந்திருந்தபோதும் உணவகங்களில் வைத்தே சந்திப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது