நட்சத்திர வீரர் Kylian Mbappé வரும் 2025 ஆம் ஆண்டு வரை PSG அணியிலேயே விளையாட உள்ளார். அவர் PSG அணியில் நீடிப்பது தொடர்பாக கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையானோர் Kylian Mbappé தொடர்ந்தும் PSG அணியில் இருப்பதை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர். அண்மையில் பரிஸ் அணியுடனான ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து, பலத்த பேச்சுவார்த்தையின் பின்னர் Kylian Mbappé மீண்டும் PSG அணியில் விளையாட சம்மதம் தெரிவித்தார். அதையடுத்து 2025 ஆம் ஆண்டு வரை அவர் PSG அணியில் விளையாட ஒப்பந்தம் போடப்பட்டார்.
அதையடுத்தே இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பினை Odoxa நிறுவனம் RTL ஊடகததுக்காக மேற்கொண்டிருந்தது. இதில் 1,005 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 442 பேர் உதைபந்தாட்ட ரசிகர்களாவர்