Île-de-France மாகாணத்தின் வெளிச்செல்லும் வீதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மாலை 6.30 மணி நிலவரப்படி 400 கிலோமீற்றருக்கும் அதிகமாக தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது சாதார நாளில் பதிவாகும் போக்குவரத்து நெரிசலை விட இரண்டு மடங்காகும். மாலை 6 மணியில்
இருந்து இரவு 8 மணிவரை வெளிச்செல்லும் அனைத்து வீதிகளிலும் இந்த போக்குவரத்து நெரிசல் தொடரும் என வீதி கண்காணிப்பாளர்களான Bison Futé நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, இன்று புதன்கிழமை கடுமையான போக்குவரத்து நிலவும் என தெரிவிக்கப்பட்டு சிவப்பு வகை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல் வரும் ஞாயிற்றுக்கிழமை Île-de-France இன் உள்வரும் வீதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் அன்றைய தினமும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது