காகிதத்தாள் தடுப்பாட்டினால் அப்பியாச புத்தகங்களின் (Notebook) விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

பணவீக்கம் காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அப்பியாச புத்தகங்களுக்கான விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடத்துக்கு 26 மில்லியன் அப்பியாச புத்தகங்களை அச்சிடும் Clairefontaine எனும் நிறுவனத்தின் நிர்வாகி இது தொடர்பாக தெரிவிக்கையில், “மரங்களுக்கான விலையும், அதனை காகிதமாக மாற்றும் பணிகளுக்கான செலவீனங்களும் அதிகரித்துள்ளது. முடிந்தவரை காகிதங்களை மீள் சுழற்சி செய்து பயன்படுத்துகிறோம். ஆனாலும் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லை!” என தெரிவித்தார்.

முந்தைய ஆண்டுகளை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அப்பியாச புத்தகங்களின் விலை அதிகரித்துள்ளமை மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.