பிரான்சில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவுப் பொருட்களின் விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் தொடர்ந்து விலைகள் அதிகரித்து வருவதனால் மக்கள் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 4 சதவீத பணவீக்கம் அதிகரித்துள்ளது அதோடு மார்ச் மாதத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பணவீக்கம் 1980ஆம் ஆண்டுகளில் நடுப்பகுதியிலிருந்து காணப்பட்ட அளவை எட்டி உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டு இதே மாதங்கள் உடன் ஒப்பிடுகையில் பிப்ரவரி மாத பணவீக்கம் 3.6 விதமாகவும் மார்ச் மாதம் 4 சதவீதமாக உயர்ந்தது என்று பிரான்ஸ் புள்ளியியல் நிறுவனம் தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எரிசக்தி செலவுகள் கணிசமாக உயர்ந்து உள்ள நிலையில் இந்த வருடம் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால் மக்களின் நுகர்வில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை உணவுப் பொருட்களின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது வரலாற்றில் மிக உச்ச அளவை எட்டி உள்ள பொருட்களை மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
இதேவேளை பிரான்ஸ் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பல தசாப்தங்களின் பின்னர் பாரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலைமை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுவது டன் கோதுமை உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் எண்ணெய் வகைகள் தானியங்கள் போன்ற பொருட்களுக்கு விலை அதிகரிப்பு தொடரும் எனவும் தட்டுப்பாடான நிலைமை தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.