பாரிஸிலுள்ள பிரபல நகைகள் மற்றும் கைகடிகாரங்கள் விற்கும் கடை ஒன்றை நேற்று முன்தினம் பட்டபகலில் கொள்ளை கும்பல் ஒன்று சூறையாடியுள்ளது.ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாரும் தாக்கப்படவில்லை.

தலையில் ஹெல்மட்டும், முகத்தில் மாஸ்கும் அணிந்த நான்கு பேர் கொண்ட அந்த கும்பலில் ஒருவர் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக பொலிசார் தெரிவிக்க, மற்றவர்களும் தானியங்கி ஆயுதங்கள் வைத்திருந்ததாக சம்பவத்தைக் கண்ணால் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.