நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிறுவன் ஒருவன் பேருந்து ஒன்றுக்குள் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளான்.

இச்சம்பவம் Chaville (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Roger Salengro வீதியில் பயணித்த RATP தொடருந்து ஒன்றுக்குள் 10 வயது சிறுவன் ஒருவன் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளான். மாலை 6.35 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.

பேருந்துக்குள் சிறுவன் சிக்குண்டது எப்படி என்பது தொடர்பாக தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. 171 ஆம் இலக்க பேருந்து ஒன்றிலேயே சிறுவன் சிக்குண்டுள்ளான்.

படுகாயமடைந்த சிறுவன், Necker மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவன் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.