ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீது தக்காளி வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இன்று புதன்கிழமை காலை Cergy நகருக்கு விஜயம் மேற்கொண்ட இம்மானுவல் மக்ரோன், அங்கு உள்ளூர்வாசிகளைச் சந்தித்தார். பின்னர் அங்குள்ள சந்தை ஒன்று விஜயம் மேற்கொண்டார். சந்தை வணிகர்களை அவர் சந்தித்தார்.

அப்போது எதிர்பாராவிதமாக மக்ரோன் மீது ஒருவர் தக்காளி பழத்தினை வீசியுள்ளார். ஆனால் ஜனாதிபதி மீது அது படவில்லை. குடை ஒன்றினால் மக்ரோன் பாதுகாக்கப்பட்டார்.

பின்னர் சில நிமிடங்களிலேயே மக்ரோன் தனது சந்திப்பை தொடர்ந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் மக்ரோன் மீண்டும் வெற்றிபெற்றதை அடுத்து அவர் மேற்கொண்ட முதலாவது பயணம் இதுவாகும்.