குழந்தைகள் விரும்பி உண்ணும் கின்டர்
சொக்லேற் (Kinder chocolate) வகைகளில் சல்மொனெல்லா (salmonella)பக்ரீரியாத் தொற்று ஏற்பட்டமைக்காக அவற்றைத் தயாரிக்கின்ற நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த ஃபெரெரோ(Ferrero) உணவுத் தயாரிப்பு நிறுவனத்தின் பெல்ஜியம் தொழிற்சாலையில்
தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி கின்டர் சொக்லேற் வகைகளிலேயே பக்ரீரியாத்
தொற்று ஏற்பட்டுள்ளது.
பெல்ஜியம் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த
தொழிற்சாலையை மூடிச் சீல் வைத்திருக்கின்றனர்.
தொழிற்சாலையில் நேர்ந்த"உள்ளகத்
தவறுகளை" (internal failures) ஏற்றுக் கொண்டுள்ள ஃபெரெரோ நிறுவனம்,
அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தை அறிக்கை ஒன்றில் வெளியிட்டு, உலகம்
எங்கும் உள்ள அதன் நுகர்வோரிடம் மன்னிப்பைக் கோரியிருக்கிறது.தொற்று
ஏற்பட்ட சொக்லேற் தொகுதிகளை அது மீளப் பெற்றுவருகிறது.
தொற்று ஏற்பட்ட சொக்லேற் வகைகள் ஐரோப்பாவில் பிரான்ஸ், பெல்ஜியம்,
பிரிட்டன், நெதர்லாந்து, அயர்லாந்து சுவீடன் போன்ற நாடுகளிலும் அமெரிக்
காவிலும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதனால் சிறுவர்கள் நோய் வாய்ப்பட்டுள்ளனர்.
*Kinder Surprise 20g பாவனைக்காலம் ஏப்ரல் 20, 2022 முதல் ஒக்ரோபர் 2022-
*Kinder Schoko-Bons பாவனைக்காலம் ஏப்ரல் 20, 2022-ஓகஸ்ட் 2022-
*Kinder Mini Eggs பாவனைக்காலம் ஏப்ரல் 20, 2022 - ஓகஸ்ட் 21, 2022-
*Kinder Happy Moments, Kinder Mix: 193g, Basket 150g, Plush 133g, Bucket 198g,பாவனைக்காலம் ஓகஸ்ட் 21, 2022-
ஆகிய சொக்லேற் வகைகளிலேயே பக் ரீரியாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்
பதை அறிவித்துள்ள ஃபெரெரோ நிறுவனம் நுகர்வோர் தமக்குள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கு வசதி
யாகக் கட்டணம் இன்றிப் பேசக்கூடிய 0800 553 553 அல்லது 0800 653 653 என்ற
இரு தொடர்பு இலக்கங்களை வெளியிட்டுள்ளது.