நீதிமன்றங்களில் விசாரணைகளை
ஒலி, ஒளிப் பதிவு செய்ய அனுமதி! பிரான்ஸின் நீதி நிர்வாகச் செயற்பாடு
களில் ஒரு முக்கிய திருப்பமாக வழக்கு விசாரணைகளை முன் நிபந்தனைகளு டன் ஒலி, ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் இது
நடைமுறைக்கு வருவதாக அரசிதழ்
(Journal official) தெரிவித்துள்ளது. விவா
கரத்து முதல் சிறு குற்றங்கள், கொலை
வரை சகல வழக்கு விசாரணைகளையும்
நீதிமன்றங்களின் நீதித்துறைத் தலை
மையாளரது (heads of the jurisdictions)
அனுமதியுடன் ஒளிப்பதிவு செய்ய முடி
யும்.
விசாரணைகளில் தொடர்புபட்ட
எவராவது விரும்பாவிட்டால் அவர்களது
முகத்தை, தோற்றத்தை, குரலை நீக்கி
அல்லது மறைத்து ஒளிப்பதிவு செய்யப்
படவேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.
பொதுவாக நீதிமன்ற விசாரணைகள்
ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு
மூடப்பட்ட நிலையிலேயே நடைபெறுகி
ன்றன. கல்வி மற்றும் தகவல், பண்பாடு அறிவியல் ரீதியான பொது நலன் கருதி (“public interest of an educational, informative, cultural or scientific nature”) இனிமேல் விசா
ரணைகளை சம்மந்தப்பட்ட தரப்பினரது
அனுமதியுடன் செய்தி நிறுவனங்கள்
ஒளி, ஒலிப்பதிவு செய்துகொள்ள முடி
யும் என்று நீதி அமைச்சு தெரிவித்துள்
ளது.
மிகப் பிரபலமான வழக்கு விசாரணை
களைச் செய்தியாக வெளியிடும் போது
செய்தி நிறுவனங்கள் நீதிமன்றக் காட்
சிகளை சித்திரங்களாக வரைந்து வெளி
யிட மட்டுமே அனுமதிக்கப்படுகின்ற வழக்கம் நெடுநாளாக இருந்துவருகிறது