இம்மானுவல் மக்ரோனை உக்ரைனுக்கு வரும்படி அந்நாட்டு ஜனாதிபதி Volodymyr Zelensky அழைப்புவிடுத்துள்ளார்.

உக்ரைனில் இரஷ்ய இராணுவத்தினர் இனப்படுகொலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலின் விளைவுகளை மக்ரோன் நேரில் வந்து பார்க்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky, நேற்றைய தினம் அமெரிக்க ஊடகமான CNN இற்கு அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் இம்மானுவல் மக்ரோனுடன் உரையாடினேன். இரஷ்யா இனப்படுகொலையை மேற்கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விளைவுகளை மக்ரோன் நேரில் வந்து பார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் வீதிகளில் - உக்ரைனிய பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு, சடலங்கள் வீசப்பட்டிருந்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைகளின் போது பிரான்ஸ் உதவி செய்யும் எனவும், அதற்குரிய ஆதாரங்களை பிரான்ஸ் சேகரித்து - நிதிமன்றத்திடம் கையளிக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.