சென்றவாரம் காவல்துறை அதிகாரி ஒருவரால் சுட்டுகொல்லப்பட்ட - Sevran நகரவாசி ஒருவருக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற உள்ளது.
கடந்த சனிக்கிழமை 33 வயதுடைய Sevran நகரைச் சேர்ந்த ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அவர் தப்பிச் சென்றபோது அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்குக்கான அஞ்சலி நிகழ்வொன்றை Aulnay-sous-Bois நகர மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற உள்ளது. அஞ்சலி நிகழ்வின் பின்னர் அமைதியான முறையில் பேரணி ஒன்றும் இடம்பெற உள்ளது.
முன்னதாக, இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து பல நாட்கள் 93 ஆம் மாவட்டத்தின் பல நகரங்களில் இரவு நேர வன்முறை பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.