Saint-Ouen நகரில் பணிபுரியும் இரு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பரிஸ் மற்றும் அதன் புறநகரில் நேற்று செவ்வாய்க்கிழமை மிகப்பெரும் தேடுதல் வேட்டை இடம்பெற்றது. அதன் முடிவில், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் Saint-Ouen நகரில் உள்ள காவல்நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழுந்து கடத்தல் வழக்கு ஒன்றில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

60 மகிழுந்துக்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ஒரு மில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேற்குறித்த இரு காவல்துறையினரும் சட்டத்தை மீறி, கடத்தல்காரர்களுக்கு துணை போனதாக குற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.