பரிசில் உள்ள நகைக்கடை ஒன்று, இன்று புதன்கிழமை காலை கொள்ளையிடப்பட்டுள்ளது.

பரிஸ், 1 ஆம் வட்டாரத்தின் Galerie Valois இல் உள்ள நகைக்கடை ஒன்றே கொள்ளையிடப்பட்டுள்ளது. கைகளில் துப்பாக்கியுடன் இரு கொள்ளையர்கள் நகைக்கடைக்குள் நுழைந்து, அங்குள்ள தங்க மற்றும் வைர ஆபணங்களை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது யாரும் காயமடையவில்லை எனவும், கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணி அளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது