அன்பான நியூலிசூர்மாறன் வாழ் தமிழ் மக்களே!
மாநகரசபையில் காலத்தின் தேவைகருதி தமிழ்மக்களுடனான அவசிய அவசர சந்திப்பு.
காலம். 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை நேரம்.காலை 10.30 மணிக்கு
இடம்.மாநகரசபை மண்டபம் நியூலிசூர்மாறன் (Mairie de Neuilly - sur - Marne )
நியூலிசூர்மாறன் வாழ் தமிழ் மக்களுக்கும்! வளர்ந்து வரும் எமது இளையவர்களுக்கும்! வர்த்தகர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்வதற்கு அரசியலில் அதிகாரத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் முன்வந்திருக்கின்றனர். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் M. Patric Anato அவர்களும்,
Neuilly - sur - Marne நகர பிதா, ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அரசியல், கல்வி, கலைகலாசாரம், விளையாட்டு, வர்த்தகம், மனிதநேயப்பணி போன்றவற்றை இங்கு வாழும் பல்லின மக்களுக்கு செய்வது போல் தமிழ்மக்களுக்கும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நியூலிசூர்மாறன் பிராங்கோ தமிழ்சங்கம் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கமைய முக்கிய அரசியல் பிரமுகர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ் மக்களைச் சந்திப்பதற்காக எதிர்வரும் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.030 மணிக்கு Mairie de Neuilly - sur - Marne மாநகரசபை மண்டபத்தில் ஒழுங்கு செய்துள்ளனர். இச்சந்திப்பில் குறித்த நேரத்தில் வந்து கலந்து கொண்டு உங்களுக்கு தேவையான விடயங்களையும், நீங்கள் எதிர்பார்க்கும் விடயங்களை அவர்களுடன் கதைத்து தெளிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். எமது விடயங்களை தேவைகளை நாம் பெற்றிட நாமே முன்வரவேண்டும்.
எமது ஒற்றுமையையும், காட்டுவோம் அனைத்துத் தமிழ் மக்களையும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
நிர்வாகம்,
பிராங்கோ தமிழ்ச் சங்கம்
Neuilly-sur-Marne
தொடர்புகளுக்கு,
தலைவர், திரு கணநாதன்: 06 20 44 18 92
நிர்வாகி, திருமதி கோமதி : 06 29 80 16 19
செயலாளர், திரு செல்வா: 06 20 40 21 71