உக்ரைனில் மிகப்புகழ்பெற்ற பூனை ஒன்று, அங்கிருந்து வெளியேறி பிரான்சில் தஞ்சம் புகுந்துள்ளது.
ஸ்டீஃபன் (Stephan) எனும் 13 வயது பூனை ஒன்றே இவ்வாறு பிரான்சில் தஞ்சம் புகுந்துள்ளது. உக்ரைன் உட்பட உலகம் முழுவதும் இந்த பூனை மிகப்பிரபலம். பல மில்லியன் பயனாளர்கள் பின் தொடரும் My Name is Stephan எனும் இன்ஸ்டகிராம் (Instagram) கணக்கு ஊடக அறியப்படும் இந்த பூனையை அனா (Anna) என்பவர் வளர்த்து வருகிறார்.
குறித்த பூனை $2,800 டொலர்ஸ் மதிப்புள்ள பணப்பை (Purse) விளம்பரம் ஒன்றில் தோன்றியுள்ளது. அதேபோல் I Just Called to Say I Love You எனும் பாடலுக்கு டிக்டொக் (Tik tok) செய்யப்பட்டு 27 மில்லியன் பார்வையினையும் இந்த பூனை பெற்றிருந்தது.
இவ்வாறு உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்தப்பூனை அண்மையில் உக்ரைனில் இருந்து காணாமல் போயிருந்ததாக செய்திகள் தெரிவித்தன. Kharkiv நகரில் வசித்த குறித்த பூனை காணாமல் போயிருந்ததை அதன் உரிமையாளர் அனா கவலையுடன் அறிவித்திருந்தார்.
சில நாட்களின் இந்த பூனை குறித்த தகவல்கள் வெளியாகின. குறித்த ஸ்டீஃபன் பூனையும் அதன் உரிமையாளரும் போலந்து நாட்டுக்குள் அகதியாக நுழைந்து - பின்னர் பிரான்சுக்குள் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீஃபன் பூனை உயிருடன் இருப்பதை அறிந்த பூனையின் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். உக்ரைனில் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து பல்லாயிரக்கணகான உயிரினங்கள், செல்லப்பிராணிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது