திரு. ரஞ்சித்குமார் (ரஞ்சித்)
(தமிழீழ காவல்துறை அதிகாரி )
முன்னாள் தமிழீழ காவல்துறை அதிகாரி திரு. ரஞ்சித்குமார் (ரஞ்சித்) அவர்கள் 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் சாவைத் தழுவிக் கொண்டார்.
சிறுவயது முதலே தேசத்தையும் தேச விடுதலையை நேசித்து, 1991 ஆம் ஆண்டு காவல்துறை ஆரம்பிக்கப்பட்டநாளிலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதி நாள் வரை உறுதியாகச் செயற்பட்ட இந்த அற்புத மனிதரை எமதுதேசம் இழந்து நிற்கின்றது.
யுத்தம் முடிவடைந்த பின் சிறிலங்கா அரசபடையின் கடும் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்து அங்கிருந்து உயிர்தப்பி வெளியேறினார்.
புலம்பெயர்ந்து ஐரோப்பா வந்து தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலையை மனித உரிமை ரீதியாகவும் சட்டரீதியாகவும் எடுத்துச்சென்ற அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.
அன்னாரிற்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.