குளிர்சாதனப்பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் Marolles-en-Brie (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 30 வயதுடைய பெண் ஒருவர் தனது இரு கைக்குழந்தைகளையும் கொலை செய்து குளிர்சாதனப்பெட்டிக்குள் மறைத்து வைத்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அப்பெண்ணின் கணவர் சடலங்களை பார்த்துவிட்டு காவல்துறையினரை அழைத்துள்ளார்.
வீட்டுக்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலங்களை மீட்டதோடு, குழந்தைகளின் தாயாரையும் கைது செய்தனர்.
குறித்த இரு குழந்தைகளும் அப்பெண்ணின் முன்னாள் கணவருக்கு பிறந்துள்ளதாகவும், குழந்தைகள் ‘இரட்டையர்கள்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது