இரஷ்யாவுக்கு சொந்தமான €850  மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய சொத்துக்களை பிரான்ஸ் முடக்கியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பொருளாதார அமைச்சர் Bruno Le Maire இத்தகவல்களை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரெஞ்சு வங்கிகளில் உள்ள €150 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள தனிநபர் பங்குகளையும் (Shares), €539 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய நில விற்பனைகள் (Real estate), €150 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள கட்டிடங்கள் மற்றும் இரண்டு படகுகளும் முடக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதேவேளை, மேற்படி சொத்துக்களை இயங்கவிடாமல் முடக்கப்பட்டுள்ளதே தவிர, அதன் சட்டபூர்வ அனுமதிகளை (License) இரத்துச் செய்யவோ, கையகப்படுத்தவோ இல்லை எனவும் Bruno Le Maire தெரிவித்தார்.

உக்ரைன்-இரஷ்யா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் பிரான்ஸ், இதுவரை பலவிதமான பொருளாதார நெருக்கடிகளை இரஷ்யா மீது விதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மேற்படி சொத்துக்களை பிரான்ஸ் முடக்கியுளை குறிப்பிடத்தக்கது.