எமானுவல் மக்ரோனின் நிபந்தனைகளையும் ஆலோசனைகளையும் ரஸ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் நிராகரித்துள்ளார். இன்று நடந்த பேச்சவார்த்தைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் ரஸ்யா அச்சுறுத்தப்படவில்லை, ரஸ்யாவே அச்சுறுத்துகின்றது என பிரெஞ்ச மக்களிடம் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் தொடர்ச்சியான உதவிகளை யூத இனத்தைச் சேர்ந்த உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி கோரியுள்ள நிலையில், புட்டின் மக்ரோனை நிரகரித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை எமானுவல் மக்ரோன் பிரெஞ்சு மக்களிற்கு அளித்த உரை மிகவும் தவறானது என்றும் உண்மைகள் அற்றது என்றும் தன்னைப் பொய்யன் என்று கூறியது தவறு என்றும் எமானுவல் மக்ரோனின் கருத்துக்களை விளாடிமிர் புட்டின் கண்டித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனில் உள்ள தேசியவாத நாசிகளை அழிக்கும் வரை தனது போர் ஓயாது என்றும் தெரிவித்துள்ள புட்டின், அதற்கு வேண்டுமானால் மக்ரோன் இணைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது