இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை அதிகாலை Viroflay (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் ஒருவரே தாக்கப்பட்டுள்ளார். இவர் அதிகாலை 3.30 மணி அளவில் Avenue du Général-Leclerc வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவரை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் அப்பெண்ணை தாக்கி, அவரிடம் இருந்த தொலைபேசியை பறிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அப்பெண் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர்கள் அப்பெண்ணை கத்தி ஒன்றினால் தாக்கியுள்ளனர். எட்டு தடவைகள் வரை அப்பெண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

பின்னர் அப்பெண்ணின் தொலைபேசியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளை Yvelines மாவட்ட காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.