பிரான்ஸ் மக்களின் அடையாள அட்டை தேவையை பூர்த்தி செய்ய நாளை முதல், 10,000 புதிய இடங்களை பாரிஸ் திறக்கிறது. பிரான்ஸில் அடையாள அட்டையைக் கோரும் மக்களின் ஆவணங்களை மறுபரிசீலனை செய்வதற்காக, பாரிஸ் நகராட்சியானது “10,000 கூடுதல் இடங்களைத் திறக்க உள்ளது.

இந்த சனிக்கிழமை, மார்ச் 26 முதல், புதிய அப்பாயிண்ட்மெண்ட்கள் குறிப்பிட்ட சில பேரூராட்சி டவுன்ஹால்களில் கிடைக்கும்.”ஒவ்வொரு மாவட்ட டவுன் ஹாலும் ஒரு மாதத்திற்கு ஒரு சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை திறந்திருக்கும் என்று பாரிஸின் முதல் துணை மேயர் இம்மானுவேல் கிரிகோயர் மார்ச் 9 அன்று அறிவித்தார்.

எனவே இந்த நடவடிக்கை மூலம் தமிழர்கள் பலரும் பயன் பெறலாம். மாதத்தில் ஒரு சனிக்கிழமை என்று அடையாள அட்டைக்கான ஆவணங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று பாரிஸின் மேயர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பல நாட்களாக அடையாள அட்டை வேண்டி காத்திருந்த மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் அனைவரும் பயன் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.