தென்மேற்கு பிரான்சில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நேற்று முதல், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு மற்றும் புதிதாக பணியாளர்களை தேர்வு செய்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முதல், ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாரத்தில் முதல் நாளாகிய இன்று மக்கள் பரபரப்பாக பணிக்குச் செல்லும் நேரத்தில் இந்த வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம், நாளையும் காலை 8.00 முதல் 12.00 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.