இன்று திங்கட்கிழமை முதல், பொதுப் போக்குவரத்து மற்றும் சுகாதார நிறுவனங்களைத் தவிர மற்றைய அனைத்து இடங்களிலும் கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு நிபந்தனைகள் நீக்கப்பட்முக்கு முக்கக் கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பிரஞ்சு மக்கள் முகக்கவசத்தை அகற்றுவதற்கு அவசரப்பட்டாலும், பலர அதனை உடனடியாக நீக்க விரும்பவில்லை. ஒவ்வொரவரிற்கும் அவர்களிற்கான தெரிவுகள் உண்டு.
இந்தத் தெரிவானது சுதந்திரமானதாக இருக்க வேண்டும். முக்க்கவசத்தை நீக்குவதும் போடுவதும் ஒவ்வொரவரினதும் தனிப்பட்ட விருப்பம். இதில் யாரும் தலையிட முடியாது»
வரவிருக்கும் வாரங்களில் எனக்கு கொஞ்சம் இருக்கும் பயம் என்னவென்றால், அது முகக்கவசத்தை அணிவது அல்லது அணியாமல் இருப்பது ஒரு நிலையான வடிவமாக மாறிவிடும், இதனால் பிரிவுகள் ஏற்படும். முகக்கவசம் அணிவதற்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளன, அவர்களின் தெரிவுகள் மதிக்கப்படல் வேண்டும்»
என தொற்றுநோயியல் நிபுணரான ஆர்னோ பொன்டனே (Arnaud Fontanet) தெரிவித்துள்ளார்.