விளாடிமிர் புட்டினுடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சற்று முன்னர் தொலைபேசியூடாக உரையாடியுள்ளார்.

நண்பகல் 12 மணியில் இருந்து 1.45 மணிக்குள்ளாக இந்த உரையாடல் இடம்பெற்றதாக எலிசே மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது மிக மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திவரும் இரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் போராடி வருகின்றார்.

முன்னதாக பல தடவைகள் விளாடிமிர் புட்டினுடன் உரையாடி யுத்தத்தை கைவிடும்படி கோரியிருந்தார். ஆனால் விளாடிமிர் புட்டின் ‘உக்ரைனை கைப்பற்றும் வரை தாம் ஓயப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

இரஷ்யா ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை புட்டினுடன் மூன்று தடவைகள் உரையாடிய மக்ரோன், இன்று நான்காவது தடவையாக மீண்டும் அவருடன் உரையாடியுள்ளார்.