​பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ், இராணுவ அமைச்சர் புளோரோனஸ் பார்லி ஆகியோர் இன்று ருமேனியா செல்கின்றனர்.


 

அங்கு ருமெனியாவின் இராணுவ அமைச்சருடன் இணைந்து ருமேனியாவில் தயார் நிலையில் உள்ள நேட்டோ படைகளைப் பார்வையிட உள்ளனர்
கொன்ஸடாண்டா அருகில் உள்ள Mihail Kogalniceanu நேட்டோ படைமுகாமிற்கு மிக அவசரமாக பிரான்சும் பெல்ஜியமும் 800 படையினரை ரஸ்யாவிற்கு எதிரான நடவடிக்கைக்காக அனுப்பி உள்ளனர். ஏற்கனவே இந்த படைமுகாமில் அமெரிக்கப் படைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.