ருமேனியாவில் நிலைகொண்டுள்ள பிரெஞ்சு இராணுவத்தினரைச் சந்திக்க, பிரெஞ்சு இராணுவ அமைச்சர் Florence Parly அந்நாட்டுக்கு பயணித்துள்ளார்.

உக்ரைனின் அண்டைய நாடான ருமேனியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக NATO அமைப்பைச் சேர்ந்த இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதில் பிரெஞ்சு இராணுவத்தினரும் உள்ளனர். அவர்களை சந்திக்கவே Florence Parly அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சந்திப்பின் போது, Florence Parly உடன் ருமேனிய ஜனாதிபதி Klaus Iohannis, ருமேனிய பிரதமர் Nicolae Ciuca ருமேனியாவின் பாதுகாப்பு அமைச்சர் Vasile Dincu உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

பிரெஞ்சு இராணுவத்தினரைச் சந்தித்த Florence Parly, ‘ஐரோப்பாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்!’ என அவர்களிடம் தெரிவித்தார்.

ருமேனியாவின் எல்லைப்பகுதியில் பிரெஞ்சு இராணுவத்தினருடன் சேர்த்து அமெரிக்கா, பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மன் போன்ற நாடுகளின் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.