கோடை விடுமுறைக்கான பயணச் சிட்டைகளின் முன்பதிவுகள் இன்று ஆரம்பித்துள்ளது.
இவ்வாண்டின், ஜூலை 2 ஆம் திகதி முதல் - ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரையான கோடை விடுமுறைக்கான பயணச்சிட்டைகளின் முன்பதிவுகளே ஆரம்பித்துள்ளன. TGV, Inoui, Intercités மற்றும் Ouigo சேவைகளில் பயணச் சிட்டைகள் முன்பதிவு செய்யப்படுவதாக SNCF அறிவித்துள்ளது.
கடந்த இரு வருடங்கள் கொரோனா வைரசினால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த கோடை விடுமுறை, இம்முறை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ள SNCF, முன்பதிவுகளில் 10 மில்லியன் பயணச் சிட்டைகள் விற்பதே தமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளது