பணம் வழங்கும் இயந்திரம் ஒன்றில் இருந்து நூதனமான முறையில் €240,000 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுளளது.

L'Haÿ-les-Roses (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பணம் வழங்கும் இயந்திர (distributeurs de billets) நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை மூன்று கொள்ளையர்கள் சேர்ந்து இன்று புதன்கிழமை காலை கடத்தியுள்ளனர். அவரை கட்டாயப்படுத்தி அவரது இடுப்பில் வெடிகுண்டு நிறைந்த இடுப்புப்பட்டி ஒன்றை அணிவித்துள்ளனர். பின்னர் பண இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து தருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் Remote மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

அதையடுத்து, குறித்த ஊழியரை Kremlin-Bicêtre பகுதியில் உள்ள பண இயந்திரத்தில் இருந்து €240,000 யூரோக்கள் பணத்தினை எடுக்கச் செய்துள்ளனர். பின்னர் 11 மணி அளவில் ஊழியரின் இடுப்பில் இருந்த இடுப்பு பட்டியை அகற்றிவிட்டு, அவரை விடுவித்தனர். பணத்தை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை Brigade de répression du banditisme (BRB) அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்