நேற்று திங்கட்கிழமை மாலை TF1 தெலைக்காட்சியில் ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொண்ட ‘நேர்காணல்’ ஒன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உட்பட Marine Le Pen, Éric Zemmour, Valérie Pécresse, Jean-Luc Mélenchon, Yannick Jadot, Fabien Roussel மற்றும் Anne Hidalgo ஆகிய ஜனாதிபதி வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்று வாக்கெடுப்புக்கு இன்னும் நான்கு வாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்த நேர்காணல் மிக முக்கியமான சந்திப்பாக அமைந்தது.

முதல் சுற்று வாக்கெடுப்பு இடம்பெறும் வரை தாம் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்த இம்மானுவல் மக்ரோன், நேற்றைய தினம் இந்த நேர்காணலில் கலந்துகொண்டிருந்தார்.

அனைத்து வேட்பாளர்களும் தங்களுடைய தேர்தற் வாக்குறுதிகளையும் அது தொடர்பான கேள்விகளுக்கு பதில்களும் இந்த நேர்காணலூடாக அளித்தனர்.