பிரான்சுக்கு உக்ரேனிய அகதிகள் அழைத்து வரப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இன்று ஆறாவது நாளாக உக்ரைன் மீது இரஷ்யா தாக்குதல் நடத்திவருகின்றது. இதுவரை 660,000 பேர் வரை உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். பல நாடுகள் அகதிகளுக்கு புகலிடம் அளித்து வருகின்றன.
இந்நிலையில், நூறு வரையான அகதிகள் பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
அதேவேளை, பிரான்சில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த நகரசபைகள் ‘தாம் உக்ரைன் மக்களுக்கு தங்குமிடம் அமைத்து கொடுக்க தயாராக உள்ளோம்!’ என அறிவித்துள்ளது.