இன்று மே 1, வியாழக்கிழமை புதிய மாதத்தில் பிரான்சில் பல்வேறு சட்ட மற்றும் கட்டண மாற்றங்கள் பதிவாகிறது. அவற்றை தொகுக்கிறது இந்த பதிவு.



எரிவாயு!

எரிவாயு கட்டணம் இன்று முதல் குறைக்கப்படுகிறது. ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கான (kWh) மின்சாரக்கட்டணம் 6.4% சதவீதத்தால் வீழ்ச்சியடைகிறது. €0.1241 யூரோக்களில் இருந்து €0.1162 யூரோக்களாக கட்டணம் குறைவடைய உள்ளது. இதனால் வருடத்துக்கு €90 யூரோக்கள் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.


கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

ஏப்ரல் மாதத்தில் பல்வேறு சமூகநலக்கொடுப்பனவுகள் அதிகரித்திருந்த நிலையில், இந்த மே மாதத்தில் 1.7% சதவீதத்தால் சில கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன.

allocation attribuée aux adultes handicapés கட்டணம் 1.7% சதவீதத்தால் அதிகரித்து €1,016.05 யூரோக்களில் இருந்து €1,033.32 வரை அதிகரிக்கிறது. 

prime d’activité கொடுப்பனவு 10.58 யூரோக்களால் அதிகரிக்கிறது.

இரண்டு பிள்ளைக்கொண்ட குடும்பத்தினருக்கு வழங்கப்படும் RSA கொடுப்பனவு 1.7% சதவீதத்தால் அதிகரித்து 1,334.98 யூரோக்களில் இருந்து 1,357.70 யூரோக்களாக அதிகரிக்கிறது. 


மின்சார மகிழுந்துகளுக்கு பதிவுக் கட்டணம்!

இதுவரை மின்சார வாகனங்களை பதிவுசெய்வதற்கு கட்டணங்கள் அறவிடப்படாத நிலையில், இன்று முதல் அதற்கும் கட்டணங்கள் அறவிடப்பட உள்ளன.

ஒலிம்பிக் போட்டிகள் பரிசில் இடம்பெற்ற போது, வீதியில் “ஒலிம்பிக் பாதை” எனும் ஒரு பிரிவு இருந்ததை அவதானித்திருப்பீர்கள். அதேபோல் மகிழுந்தில் தனியே பயணிப்பவர்கள் சக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றால், அவர்களுக்கு என பிரத்யேகமாக voie de covoiturage எனும் பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்று முதல் நடைமுறைக்கு வரும் இந்த பாதையினை ஏனையவர்கள் பயன்படுத்தினால் 135 யூரோக்கள் வரை குற்றப்பணம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.