பிரான்ஸ்: ஹெரால்ட்டில் பறவை எச்சம் மோசடி பற்றி காவல் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வழிப்போக்கர்கள் மீது போலி பறவை எச்சங்களை வீசி அவர்களின் உடமைகளைத் திருடவதே இதற்கு பின்னணியில் உள்ள நுட்பமாக உள்ளது.

இது மக்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத உத்தியாக இருந்தாலும், காவல்துறையினர் கண்டுபிடித்து விட்டனர்.இந்த சதியில் பொது இடங்களில் தனியாக இருக்கும் மக்கள் மற்றும் வயதானவர்கள் பெரிய அளவில் குறிவைக்கப்படுகின்றனர்.