சமூக ஆர்வலர் Yvan Colonna மரணமடைந்துள்ளதை அடுத்து, Corsica தீவில் உள்ள Collectivité de Corse அலுவலகத்தில் - அத்தீவுக்கான அலுவலக கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. இச்செயலுக்கு மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. Yvan Colonna இன் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்செயலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார். ‘இது முறையற்ற செயல்’ என தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்கள் எதையும் குறிப்பிட்டாத மக்ரோன், ‘இது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு!’ என விமர்சித்திருந்தார்.

கொலை வழக்கொன்றில் தொடர்புபட்டு, சமூக ஆர்வலர் Yvan Colonna சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அவர் சக சிறைக்கைதி ஒருவரால் தாக்கப்பட்டிருந்தார். அதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கட்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருந்தார்