உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky, நேற்று புதன்கிழமை செனட் சபையினருடன் உரையாடியுள்ளார்.
இந்த உரையாடல் காணொளி அழைப்பு (Video) வழியாக இடம்பெற்றது. 15 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த உரையாடலின் போது, முதலில் உக்ரைனில் கொல்லப்பட்ட மக்களுக்கான அகவணக்க நிகழ்வு இடம்பெற்றது. அதையடுத்து செனட் சபை உறுப்பினர்களுடன் உரையாடிய Volodymyr Zelensky, “இரஷ்யாவின் படையெடுப்பை பிரான்ஸ் தலையிட்டு தடுக்க வேண்டும்!” என கேட்டுக்கொண்டார்.
“நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். இரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கவேண்டும். சிறுவர்களையும், பெண்களையும் ஈவிரக்கமில்லாமல் கொல்லும் இரஷ்யா மீதுபொருளாதார தடை விதிக்க வேண்டும்!” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.