பிரான்ஸ் : மார்சேயில் மார்ச் 3, வியாழன் அன்று தொடர்ச்சியாக கத்திக் குத்து தாக்குதல்கள் நடந்தன, இதன் விளைவாக மொத்தம் ஒரு மரணம் மற்றும் 4 நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
முதல் தாக்குதல் வியாழன் காலை 10:30 மணியளவில் நடந்தது, நாற்பது வயதில் ஒரு நபர் நடுத்தெருவில், நொய்ல்ஸ் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள Boulevard கரிபால்டியில் கத்தியால் குத்தப்பட்டார். இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
26 வயது இளைஞன், பாதிக்கப்பட்டவரை கத்தியால் பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தாக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.
அத்துடன், 13வது வட்டாரத்தில் , கத்திக்குத்து சண்டையில் முப்பது வயது மதிக்கத்தக்க இருவர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிர் பிழைக்கவில்லை.உடல்ரீதியான வன்முறை மார்சேயில் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டை விட 2021 இல் 20.8% அதிகமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.