பிரான்ஸ் : இந்த வெள்ளிக்கிழமை காலை, நீஸில் (Provence-Alps-C te d’Azur) 9 வயது சிறுமி பள்ளியில் தவறி விழுந்து உயிரிழந்தார். Saint-Philippe பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட அவசர சேவைகள், அவளை உயிர்ப்பிக்க முயன்றன. ஆனால், சுயநினைவை இழந்த அந்த சிறுமியை உயிர்பிக்க முடியவில்லை. வெள்ளிக்கிழமை காலை நீஸில் உள்ள நகர சபையில் இருந்தபோது,
நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி, கூட்டத்திலிருந்து சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். மற்றும், அந்த சிறுமியின் குடும்பத்திற்கு தனது அனுதாபங்களை தெரிவித்தார்.