பிரான்சில் குழந்தை இறப்பு அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்! மேலும், இதற்கான காரணங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்!
இருபது ஆண்டுகளாக குழந்தை இறப்புகளை கணக்கிட்டு வரும் இன்செர்மில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் குழு, 2012 மற்றும் 2019 க்கு இடையில் புள்ளிவிவரங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பிரான்சில் பல தசாப்தங்களாக இது முதல் முறையாகும். இது ஒரு “கவலைக்குரிய போக்கு” என ஆராய்ச்சியாளர்கள் குழு குறிப்பிடுகிறது. 2012 மற்றும் 2019 க்கு இடையில், ஆயிரம் பிறப்புகளில், பிரான்ஸ் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 3.3 இறப்புகளில் இருந்து 3.5 இறப்புகளுக்கு சென்றது .
மொத்தத்தில் இறப்பு விகிதத்தில் 7% அதிகமாகியுள்ளது. ஸ்வீடன் அல்லது பின்லாந்துடன் ஒப்பிடுகையில், பிரான்ஸ் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே 1,200 இறப்புகளை ” அதிகப்படியாக ” கவனிக்கிறது.
இன்செர்ம் ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்த ஆய்வு, கவலையளிக்கிறது . உண்மையில், இறப்பு விகிதம் மக்கள்தொகையின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய குறிகாட்டியாகும்.