எதிர்பார்ப்புக்கு மாறாக இன்று முதல் பிரான்சில் குறையை இருக்கும் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக எரிபொருள் விலை எந்த அளவுக்கு உயர போகிறதோ என்ற அச்சத்தில் உலகம் இருக்க,

பிரான்சில் இன்று முதல் பெட்ரோல் டீசல் விலை குறைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக மற்ற நாடுகளைப் போல பிரான்சிலும் எரி பொருட்கள் விலை உயரத்தான் செய்தது.

பெட்ரோல் லிட்டருக்கு 2‌ யூரோக்கள் முதல் 2.27 யூரோக்கள் வரை அதிகரிப்பது ஆனால் இன்று முதல் பிரான்சில் எரிபொருள் விலை குறையும் என பிரான்சின் இரண்டாவது அதிக எரிபொருள் வாங்கும் நிறுவனமான‌ E. Leclercஇன் முதன்மை செயல் அலுவலராகிய Michel-Edouard Leclerc தெரிவித்துள்ளார்.

டீசல் விலை லிட்டருக்கு 35 யூரோ சென்ட்களும் சில வகை பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 முதல் 10 சென்டு களும் குறையலாம் என அவர் தெரிவித்துள்ளார் இது போக அடுத்த வாரத்தில் எரிபொருள் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் நான் எரிபொருள் விலை முன்னர் அதிகரிக்கும் என்று அறிவித்தேன். ஆனால், சந்தை நடவடிக்கையை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது இது வித்தியாசமான ஒரு சந்தை நிலவரம் ஆக உள்ளது எனவே யாராலும் இதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார்.