ஒற்றைப் பெற்றோர் , பெரும்பாலும் தாய்மார்களுக்கு குடும்பத்தை நாடாத்த தேவையான வருமானம் கிடைக்க பெறாத சந்தர்ப்பங்களில் மிகவும் வறுமையை எதிர்நோக்குகின்றது.குழந்தைகளின் கல்விக்குத் தேவையான பணத்தை செலுத்தாததால் , ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் வறுமைக்கு தள்ளபடுகிறது

இவ்வாறான வருமானம் கிடைக்க பெறாத பட்சத்தில், குடும்ப உதவித்தொகை மூலம் நிதி வழங்கப்படுகிறது. இது குடும்ப ஆதரவு கொடுப்பனவு ஆகும். இதனால் மாதத்திற்கு 116.11 யூரோக்கள் ஒரு குழந்தைக்கு கிடைக்க பெறுகின்றன இவ் தகவல் பெரும்பாலான ஒற்றைபெற்றோருக்கு தெரிவதில்லை. இது தனிநபர்கள் சமூக தேவைக்கான உதவிகளை பெற உதவுகிறது.

இவ் உதவி தேவையான 20,000 ஒற்றைத் தாய்மார்களை விசாரித்ததன் மூலம், Mes Allocs நிறுவனத்திற்கு அவர்கள் வழங்கிய தகவல்களின் படி மேலும் பல முடிவுகள் கிடைக்க பெற்றன. 20,000 ஒற்றைத் தாய்மார்களில், அவர்களில் 7,400 பேர் அல்லது கிட்டத்தட்ட 37% பேர்,

இவ் சமூக அமைப்பைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்று கூறினர்.58% பேர் இவற்றை பற்றி தெரிந்ததும் பயன்படுத்தாது உள்ளது மிகவும் கவலையளிக்குறது. இந்த குடும்ப ஆதரவு கொடுப்பனவைப் பற்றி அறிந்திருக்கக்கூடிய மற்றும் அறியாத நபர்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு கணிக்கபட வேண்டும்.