பிரதம மந்திரி ஜீன் காஸ்டெக்ஸ், அவர்கள் மார்ச் 14 முதல், “தடுப்பூசி செலுத்தியவர்கள் சினிமா, அருங்காட்சியகம் அல்லது உணவகத்திற்குச் செல்ல உங்கள் QR குறியீட்டை scan செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் “சுகாதார நிலைமை மேம்பட்டு வருகிறது” என்றும் முகக்கவசத்தை வீட்டிற்குள் அணிவதை நிறுத்தலாம் எனவும் அறிவித்தார்.

நீங்கள் Sars-CoV-2 சோதனை செய்தாலும் கூட, கடைகள், திரையரங்குகள், வணிகங்கள் மற்றும் பள்ளி வகுப்பறைகள் போன்ற இன்னும் தேவைப்படும் இடங்களிற்கு செல்ல விதிவிலக்குகள் காணப்படுகின்றன மேலும் அறிவிப்பு வரும் வரை முகக்கவசத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விடாது.

மெட்ரோக்கள், டிராம்கள், பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் போன்ற “பொது போக்குவரத்தில் இது கட்டாயமாக இருக்கும்,எனவும் நீங்கள் taxis மற்றும் VTC இல் இது முகக்கவசம் இல்லாமல் செல்ல முடியும் எனவும் கூறியுள்ளார்.

ஒரு செய்தியில் ” கோவிட் தொற்று உள்ளவர்கள்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள்,அறிகுறி உள்ளவர்கள் மற்றும் முகக்கவசத்தை அணியவேண்டும் என சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது” என்றும் குறிப்பிடுகிறது.
எவ்வாறாயினும், மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள், மருத்துவ அலுவலகங்கள் போன்ற சுகாதார நிறுவனங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது