காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி, தப்பிச் சென்றவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
இன்று சனிக்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு இச்சம்பவம் Aulnay-sous-Bois நகரில் இடம்பெற்றுள்ளது. Sevran நோக்கிச் செல்லும் வீதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 33 வயதுடைய ஒருவர் சிற்றூந்து ஒன்றில் பயணித்துள்ளார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.
ஆனால் அவர், காவல்துறையினரின் அறிவிப்பை மதிக்காமல், தொடர்ந்து பயணித்துள்ளார்.
காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்யும் நோக்கில் துரத்திச் சென்றனர். ஆனால் வேகமாக மகிழுந்தைச் செலுத்திய அவர், சில நிமிடங்களில் Aulnay-sous-Bois பகுதியில் விபத்துக்குள்ளானார்.
மகிழுந்து ஒன்றுடன் சிற்றுந்து மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உலங்குவானூர்தி மூலம் அவர் கொண்டுசெல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அப்பகுதி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.